செய்தி

அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.

மேற்கு ஆசிய போர் நிலைவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்திய பிரதமரிடம் , ரூபியோ பகிர்ந்து கொண்டார்.

இதன்போது அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் மோதல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!