பிரான்சுக்குள் நுழைய இஸ்ரேல் அமைச்சருக்கு தடை!
சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் Itamar Ben-Gvir பிரான்சுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு ,அவர்கள் வதைக்குட்படுத்தப்படும் காணொளியை இவர் வெளியிட்டிருந்தார்.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சும் கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளது.
இந்தச் செயல் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறையைத் தூண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பென்-கிவீரின் இந்த அநாகரீகமான நடவடிக்கையை இத்தாலி, கனடா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பிரான்ஸ் மக்களும் அடங்குவதால், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சம்பந்தப்பட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




