சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியும் வலியுறுத்து!
இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு உட்பட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கயந்த கருணாதிலக்கவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சாணக்கியனுமே இந்த கோரிக்கையை விடுத்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலும், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.





