ஈரானின் கோரிக்கைகளை ட்ரம்ப் கட்டாயம் ஏற்க வேண்டும்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik
எச்சரித்துள்ளார்.
ஈரானிய மக்களின் உரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்கத் தவறினால், அது அந்நாட்டிற்கு மேலும் பல தோல்விகளை மட்டுமே தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மோதல்களில் இருந்து அமெரிக்கா தப்பிக்க வேண்டுமானால், அது போர்க்களத்திலும் இராஜதந்திர ரீதியிலும் ஈரானின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இந்த மோதலைத் தொடர்வது அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் கூடுதல் இழப்புகளையும் செலவுகளையும் மட்டுமே உருவாக்கும் என்று Reza Talaei-Nik கூறியுள்ளார்.





