இலங்கை

பசிலை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷைவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கொன்றில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தறை பிரதான நீதிபதி சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக, பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினால் மாத்தறை  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷ இன்று  நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருந்தது.

இருப்பினும் அவர் தற்போது  வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என அவருடைய வழக்கறிஞர்கள் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

குறித்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!