ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூமீதான குற்றச்சாட்டு: விசாரணை வேட்டை தீவிரம்!

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்சர்மீதான பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களைத் தொடர்ந்து, அவர் தனது அரசுமுறைப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

இந்தப் புலனாய்வு ஒரு குற்றவியல் சம்பவத்துக்கு இணையான முக்கியத்துவத்துடன் கையாளப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கூடுதல் தகவல்களையும் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மன்னர் சார்லஸ் இந்த விசாரணைக்குத் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில், இது அரச குடும்ப வரலாற்றில் ஒரு முன்னோடியில்லாத சட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தேம்ஸ் வேலி மற்றும் சர்ரே காவல்துறையினர் பல தசாப்தங்களுக்கு முந்தைய முறைப்பாடுகளை தற்போது விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.

மறைந்த ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனான 66 வயது ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் உடனான நட்பு குறித்து தான் வருந்துவதாகவும், ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் இதுவரை எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!