உலகம் செய்தி

புல்வாமா தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுட்டுக்கொலை!

புல்வாமா தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச் சென்றது ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்பது தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது புல்வாமா மாவட்டத்தின் கர்பத்போரா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஹம்சா புர்ஹான் என தெரியவந்தது.

இவர் அல் பத்ர் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். இச்சம்பவத்துக்குப்பின் ஹம்சா புர்ஹான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக இந்திய மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில், ஹம்சா புர்ஹான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ஹம்சா புர்ஹான் இறந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!