உலகம் செய்தி

வலுவான “சூப்பர்” எல் நினோ காலநிலை அமைப்பு – புயல்கள் உருவாக சாத்தியம்!

வலுவான “சூப்பர்” எல் நினோ காலநிலை அமைப்பு அட்லாண்டிக் கடற்பரப்பை அமைதியாக வைத்திருக்கும் அதேவேளை கிழக்கு பசிபிக்கில் புயல்களுக்கான நிலைமைகளை அதிகரிக்கும் என்று  தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக அடுத்த மாதம் முதல்  8 முதல் 14  வரையான புயல்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 3 முதல் 6 புயல்கள் மணிக்கு 74 மைல் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய, வரலாறு காணாத வெப்பமான கடல் வெப்பநிலை, புயல்களை வேகமாகத் தீவிரப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர இருக்கும் சூறாவளி உள்ளிட்ட காலநிலைமைகளுக்கு தயாராக இருக்குமாறு அவ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!