இலங்கை செய்தி

பிள்ளையானை சிறையில் சந்தித்தது உண்மைதான்: ஒப்புக்கொண்டார் நாமல்!

“போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு ,

“பிள்ளையானைச் சந்திப்பதற்காக நாம் சுவர் ஏறி குதித்து சிறைச்சாலைக்குள் செல்லவில்லை. சட்டப்பூர்வமாகவே அவரை சந்தித்திருந்தோம்.

பிள்ளையானை சந்திக்கும்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். சிறைச்சாலைக்குள் இரகசிய பேச்சு நடத்த முடியாது. அவ்வாறு நடத்த முடியுமெனில் நான் அங்கு சென்றிருக்கவும் மாட்டேன்.

நாமல் ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் பிள்ளையானை சந்தித்தனர் என்பதை அறிவதற்காகவா மக்கள் பணத்தை செலவளித்து பிரான்ஸ் சென்றனர். இது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

பிள்ளையான் முதலவராக பதவி வகித்தவர். எம்முடன் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்.
நல்லாட்சியின்போது அரசியல் கைதியாக இருந்தவர். போரை முடிப்பதற்கு ஒத்துழைத்தவர்.

பிள்ளையானை நாம் திருட்டுதனமாக சந்திக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியல் மயப்படுத்தி அதன் ஊடாக அரசியல் லாபம் தேடுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!