தூண்டிவிடும் காணொளி விவகாரம் – இஸ்ரேலிய தூதுவருக்கு பிரித்தானியாவும் அழைப்பு
காசா நோக்கிச் சென்ற உதவிக் கப்பலில் இருந்த ஆர்வலர்களை கேலி செய்ததாக கூறப்படும் காணொளி தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலின் மூத்த தூதுவரிடம் விளக்கம் கோரியுள்ளது
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட உதவிக் கப்பல் ஆர்வலர்களை கேலி
செய்யும் வகையில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir காணொளிகளை வெளியிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஏற்கனவே பொதுவாகக் கண்டித்துள்ளார்.
மேலும், பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் Yvette Cooper, பென்-க்விரின் செயல்களை கண்டித்து, “இதைக் கண்டு உண்மையிலேயே
அதிர்ச்சியடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இஸ்ரேலின் பொறுப்புத் தூதரை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் நேரில் அழைத்து விளக்கம் கோரியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.




