ஈரான் நெருக்கடிக்கு ராஜதந்திர தீர்வே அவசியம் – ரஷ்யா
ஈரானின் நலன்களை கருத்திற் கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக
மட்டுமே தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, பேச்சுவார்த்தைகள்
மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும், ஈரானின் யுரேனியம் கையிருப்புகள் குறித்து தீர்மானிக்கும் உரிமை முழுமையாக ஈரானுக்கே சொந்தமானது
என்றும் அவர் வலியுறுத்தினார்.





