இலங்கை செய்தி

சீதனக் கொடுமை: யாழில் இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண், இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். எனினும், இவர்களது திருமணத்தைக் கணவனின் தாயார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

திருமணத்தின் பின்னர், 25 பவுண் தங்க நகையையும் வீடு ஒன்றையும் சீதனமாகக் (வரதட்சணை) கேட்டு கணவனின் தாயார் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் காணப்பட்டதால், கோரப்பட்ட சீதனத்தை அவர்களால் வழங்க முடியவில்லை.

இந்தநிலையில், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு கணவனின் தாயார் முயற்சிகளை மேற்கொண்டபோது, தனது கணவனை வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அந்தப் பெண் கோரியுள்ளார்.

எனினும், ‘உனது குடும்பத்தினர் என் தாயார் கேட்ட சீதனத்தைத் தராத காரணத்தினால்தான் நான் வெளிநாட்டுக்குப் போகின்றேன்’ எனக் கணவனும் தெரிவித்துள்ளார்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளான இளம் பெண், நேற்றுக் காலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!