இந்தியா செய்தி

ஹார்முஸ் நீரிணை: புது வியூகம் வகுக்கிறது இந்தியா!

ஹார்முஸ் நீரிணை பகுதியை இந்திய டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்குரிய திட்டங்களை இந்தியா வகுத்து வருகின்றது என தெரியவருகின்றது.

இதற்கமைய இந்திய டேங்கர் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது இந்திய போர்க்கப்பல்கள் அவற்றுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் ஏற்பாடுகள் இடம் பெறவுள்ளன.

இதற்குரிய திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்தவுடன் இந்திய டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை பகுதிக்கு செல்லும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா கடற்படை முற்றுகை நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றது.

ஈரானும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிவருகின்றது.

இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்தாலும், இது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை.

எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் வியூகங்களை இந்தியா வகுத்து வருகிறது.

இதன் நிமித்தமே ஹார்முஸ் நீரிணை பகுதியை இந்திய டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!