” ஐ.நாவரை சென்றுகூட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”
“எமது அவலக்குரல் ஐ.நா.வரை சென்றிருந்தாலும்கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. விடிவு பிறக்கவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து சிலர் இங்கு விமர்சனங்களை முன்வைத்தனர்.
எமது மக்களின் அந்த வலி சுமந்த பயணம் அவர்களுக்கு தெரியுமா? தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த காட்சி நெஞ்சை உலுக்கியது.
இறுதிப்போரில் எமது இனம் எவ்வளவு வலிகளை சுமந்து வந்தது. விண்ணை தொடுமளவுக்கு மக்களின் அழுகுரல் ஒலித்தது. எனினும், அந்த கடவுள்கூட காட்டவில்லை.
எங்களுடைய இனத்தின் அவலம் ஐநாவரை சென்றால்கூட இன்னும் விடிவு கிடைக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அதற்குரிய நடவடிக்கை இன்னும் இடம்பெறவில்லை. வன்னி என்பதால் இவ்வாறு புறக்கணிப்பு இடம்பெறுகின்றதா என தெரியவில்லை.” – என்றார்.




