ராஜஸ்தான், லக்னோ அணிகள் இன்று மோதல்!
IPL தொடரில் இன்றிரவு நடைபெறும் 64 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6- வது இடத்தில் உள்ளது.
playoff சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணி playoffசுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.
எனினும் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை கௌரவமான முறையில் நிறைவு செய்ய முயற்சிக்கக்கூடும்.





