இலங்கை செய்தி

யுத்த வீரர்கள் நினைவு தினம் – முப்படையைச் சேர்ந்த 5,289 பேருக்கு பதவி உயர்வு

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், அனுஷ்டிக்கப்படுகிறது.

முப்படைத் தளபதிகளின் பரிந்துரைகளின் பேரிலும் முப்படைகளின் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாகவும் இப்பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!