அத்துமீறுகிறது இஸ்ரேல்: துருக்கி கடும் கண்டனம்!
காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை துருக்கி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த நடவடிக்கையை கடற்கொள்ளைச் செயல் சுட்டிக்காட்டியுள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சு, கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதில் பங்கேற்ற நிலையில், இத்தகைய அடக்குமுறைகளால் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஆதரவைத் தடுக்க முடியாது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கி வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.





