செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு ‘ஐஸ்’: சீமானுக்கு ‘மிளகாய்’! தமிழகத்திலும் வேலை காட்டும் அர்ச்சுனா!

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (16) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேவேளை, தமிழக ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணல்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை, அர்ச்சுனா எம்.பி. கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

ஆமை கறி கதை பற்றியெல்லாம் பேசிவருகின்றார். புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுபுறத்தில் முதல்வர் விஜய்யை புகழ்ந்து கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே அர்ச்சுனா எம்.பி. பார்க்கப்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!