பிரித்தானிய அரசியலில் புதிய மாற்றம்? வெஸ் ஸ்ட்ரீட்டிங் மீது அதிகரிக்கும் கவனம்
பிரித்தானிய அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ள Wes Streeting இன்று முக்கிய அரசியல் உரையாற்ற உள்ளார்.
அவர் தொழிலாளர் கட்சியின் தலைமைப் போட்டியில் தற்போது நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும், கட்சிக்கான தனது புதிய பார்வையை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் கட்சியின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஸ்ட்ரீட்டிங், குறிப்பாக சுகாதாரத் துறை மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த தனது கருத்துகளால் கவனம் பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரின் உரை, தற்போதைய கட்சி தலைமையிலிருந்து வேறுபட்ட அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





