ஐரோப்பா

மற்றுமொரு நேட்டோ நாடு மீதும் குறி : துருப்புக்களை அனுப்ப மறுப்பு!

போலந்திற்கு 4,000 அமெரிக்கப் படைகளை அனுப்பும் முடிவை பென்டகன் மாற்றியமைத்துள்ளது.

நேட்டோவில் எழுந்துள்ள விரிசல் நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பை பென்டகன் குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது போலந்திற்கான இராணுவத்தை அனுப்புவதிலும் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

ஈரான் போர் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவை  இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

பென்டகன் இது ஒரு “விரிவான, பல அடுக்கு செயல்முறை” என்று கூறியுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிகாரிகளே ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளில் ஒருவர் “இது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

ஈரான் போரில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத நேட்டோ நட்பு நாடுகளைத் தண்டிப்பதற்கான வழிகளை, ட்ரம்ப் மிகத் தீவிரமாக பரிசீலித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!