உலகம் செய்தி

மாலத்தீவில் ஸ்கூபா டைவ் சென்ற ஐந்து இத்தாலியர் உயிரிழப்பு!!

மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் (scuba diving) விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த ஐவரும் வாவூ அட்டோலில்  சுமார் 50-60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளை  ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்நிலை ஏற்பட்டதாக தெரிவக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அவர்கள் நீருக்கடியில் மூழ்கச் சென்ற நிலையில் மீண்டும்  மேற்பரப்பிற்கு வராததால், தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவான நீரோட்டங்கள் மற்றும் சிக்கலான நீருக்கடியில் உள்ள சுரங்கப்பாதைகளுக்குப் பெயர் பெற்ற குகை அமைப்புகளுக்குள் நுழைய முயன்றபோது, ​​ ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!