திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – மு.க.ஸ்டாலின் போட்டி!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க கட்சி செயற்குழு கூட்டத்தில் தொடர்புடைய தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , முதலமைச்சருமான விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார்.
அதேநேரம் அவர் பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் 02 தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஒரு தொகுதியை இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.
இதற்கமைய திருச்சி கிழக்கு தொகுதியை அவர் இராஜினாமா செய்திருந்தார். அந்த தொகுதி காலியானதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




