இலங்கை செய்தி

‘மீள்குடியேற்றம்’ – ஜுன் 15 ஆம் திகதிவரை காலக்கெடு!

பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) பிற்பகல் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அனர்த்த நிலைமையினால் பதுளை மாவட்டத்தில் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 தோட்ட வீடுகளும் 507 கிராமிய வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 3,434 ஆகும்.

அந்த மக்களை மீள்குடியேற்றும் செயல்முறை மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இங்கு பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

மீள்குடியேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட, தற்போது தனியார் நிறுவனங்களின் வசம் உள்ள அரச காணிகளை விரைவாக விடுவிப்பது குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டதுடன், அக்காணிகளை வழங்குவது தொடர்பாக நிறுவனங்களுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டவுடன் வீட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மீள்குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அறிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு அப்பால் சென்று, வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு புதிய வீட்டின் உரிமை குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மீள்குடியேற்றத்தின் போது வேறு காணிக்குச் செல்வது குறித்து தயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது தொடர்பில் முடிவெடுப்பதற்காக, அதிகபட்சமாக ஜூன் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

மேலும், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதலின் முன்னேற்றம், வாழ்வாதார இழப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் தலங்களுக்கான இழப்பீடுகள் வழங்குதல், வீட்டு வாடகை செலுத்துதல் மற்றும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சேதமடைந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 21 வீதிகளின் பணிகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், மாகாண வீதி அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் நிதித் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த அனைத்து வீதிகளுக்கும் தேவையான நிதி மதிப்பீடுகளைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!