இந்தியா

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும், 06 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஒகஸ்ட் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க், டெல்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர், மும்பை-டாக்கா மற்றும் டெல்லி-மாலே ஆகிய வழித்தடங்களில் தனது சேவைகளை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த 6 வழித்தடங்களின் முழுமையான நிறுத்தம் தவிர, 20 க்கும் மேற்பட்ட சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் வாராந்திர இயக்க எண்ணிக்கையை ஏர் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும் மாதத்திற்கு 1,200 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவற்றில் வட அமெரிக்காவிற்கு வாரத்திற்கு 33 விமானங்களும், ஐரோப்பாவிற்கு வாரத்திற்கு 47 விமானங்களும், இங்கிலாந்திற்கு வாரத்திற்கு 57 விமானங்களும், ஆஸ்திரேலியாவிற்கு வாரத்திற்கு 8 விமானங்களும், தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் சார்க் பிராந்தியங்களுக்கு வாரத்திற்கு 158 விமானங்களும், மொரிஷியஸிற்கு வாரத்திற்கு 07 விமானங்களும் இயக்குவது அடங்கும்.

Sainth

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!