செய்தி விளையாட்டு

பெங்களூரு , கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 57 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி 4 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி .5 தோல்வி 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதல் 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு எழுச்சி கண்டுள்ளது.

பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்த பெங்களூரு அணியும், தனது எழுச்சியை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 15-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!