மண்சரிவு அபாய எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, சில மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கைக விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிரிந்தி ஓயாவின் தனமல்வில பகுதியிலுள்ள நீர் மானியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அங்கு தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





