ஹன்டா வைரஸ் பரவல் – எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்!
ஹன்டா வைரஸ் பரவல் குறித்து உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ள எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகளை வெளியேற்றும் பணி இன்று (10) தொடங்கியது.
அந்த சொகுசுக் கப்பல் தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்றம் குறித்து சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா வெளியிட்ட அறிக்கையில், பயணிகளை வெளியேற்றும் பணி சாதாரணமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மேலும், கப்பலில் உள்ள பயணிகள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பயணிகள் கப்பலில் சிக்கியுள்ளனர். அவர்களை அவரவர் நாடுகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து, சிறிய படகுகள் மூலம் கரைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், கப்பலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மேலும், மற்றொரு குழுவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





