ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த One Nation கட்சி!

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Farrer தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பல தசாப்தங்களாக நிலவி வந்த கூட்டணி கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து One Nation கட்சி ஒரு வரலாற்றுச் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Farrer தொகுதியில் One Nation கட்சி சார்பில் களமிறங்கிய David Farley பெற்ற வெற்றி, அக்கட்சி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேரடியாகப் பெறும் முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

Farrer தொகுதியில் லிபரல் கட்சியின் வாக்குகள் பெருமளவில் சரிந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த அதிரடி மாற்றமானது ஆஸ்திரேலியாவின் வலதுசாரி அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் மாற்றத்தின் அறிகுறியாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

வரும் காலங்களில் மற்ற தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் ஒன் நேஷன் கட்சி தனது தேர்தல் வியூகங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த வெற்றி, பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு பலமான எச்சரிக்கையாகவும், நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாகவும் அமைகிறது எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!