உலகம் செய்தி

அச்சுறுத்தலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா தனது “அச்சுறுத்தும் அணுகுமுறை” மற்றும் “விரிவாக்கப் போக்கை” மாற்றினால், ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தெரிவித்துள்ளார்.

துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களில் அவர் இதை கூறியதாக அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்கா தனது தற்போதைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக ஈரான் தனது நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் முழு தயார்நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!