சரிந்தது மம்தா பானர்ஜியின் கோட்டை: பாஜக முதல்வர் பதவியேற்பு!
தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவுசெய்த நிலையில், மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்துக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





