மீண்டும் ஒரு கொவிட் நெருக்கடி? ஹன்டா வைரஸ் தொற்றால் பீதியில் உலகநாடுகள்!
ஹன்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த தொற்று உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது சொகுசு கப்பலிலிருந்து இறங்கியவர்களையும், அதன் பின்னர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொறித்துண்ணிகள் மூலம் பரவும் இந்நோய் தொற்றினால் பரந்த பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Ghebreyesus ) தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்கள் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




