உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே பரஸ்பர தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனான் பகுதியில் உள்ள அல்-மன்சூரி (al-Mansouri)மற்றும் காகாயித் அல்-ஜிஸ்ர் (Qaaqaait al-Jisr)நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா அமைப்பு பிய்யாதா (Biyyada) பகுதியில் இஸ்ரேலிய பீரங்கி இலக்குகளை ஏவுகணையால் தாக்கியதாக கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

முதலில் 10 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் பின்னர் ஏப்ரல் 23 அன்று மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!