உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளான இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது அதிவேகமகா வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இந்த உயிரழப்புகள் பதிவாகியுள்ளன.
உயிரழந்தவர்களில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டு, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





