யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் ஊதி, வெடி கொழுத்தி வெற்றி கொண்டாடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன.
திமுக 2-ம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளாத்தூரில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது திமுகவின் கோட்டை எனப்படும் சென்னை அதன் அனைத்து தொகுதிகளையும் தவெகவிடம் இழந்திருக்கிறது.
அதேபோன்று தெற்கு, மேற்கு, வடக்கு, டெல்டா என அனைத்து மண்டலங்களிலும் தவெக கோலோச்சியிருக்கிறது.
இந்த நிலையில் ஊழலற்ற நேர்மையான அரசியல் மாற்றத்தை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டு செயல்படுத்துவார் என்ற விருப்பத்தில் தமிழக இளைஞர்களும், மக்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் பொது வெளியில் உருவாகியுள்ளன.






