ஐரோப்பா

புற்றுநோய்களுக்கு ஒரு நிமிடத்தில் செலுத்தக்கூடிய நோயெதிர்ப்பு ஊசி அறிமுகம்!

நுரையீரல், மார்பகம் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட  புற்றுநோய்களுக்கு ஒரு நிமிடத்தில் செலுத்தக்கூடிய நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசியை NHS அறிமுகப்படுத்தியுள்ளது.

பெம்ப்ரோலிஸுமாப்பின் (pembrolizumab) எனக் கூறப்படும் இந்த ஊசியானது முந்தைய நரம்பு வழி சொட்டு மருந்து முறையுடன் ஒப்பிடும்போது, ​​சிகிச்சை நேரத்தை 90 சதவீதம் வரை குறைப்பதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஏறக்குறைய 14000 நோயாளர்கள்  இந்த விரைவான ஊசி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் NHS ஊழியர்களின் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதோடு, அதிக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!