உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும்.

இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பிரிவு கடந்த காலத்தில் காசா போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தெற்கு லெபனான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு தரப்புகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!