விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
போர் பதற்றத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டதையடுத்து,
விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக
அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், தொடர்புபட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்,
எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.





