ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!
ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது.
64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது.
இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.





