உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர்.

பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர்கள், அங்கு வைதீகாள் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதி, போகர் ஜீவ சாமதி ஆகிய இடங்களுக்கும் சென்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மீண்டும் வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்து, காரில் புறப்பட்டு சென்றனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுந்தர்.சி, “சித்ரா பவுர்ணமி நாளில் முருகனை தரிசிப்பதற்காக பழநி வந்திருக்கேன். பழநி எனக்கு சொந்த ஊர். முருகன் எனக்கு குலதெய்வம். அதனால் அடிக்கடி பழநி வருவேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது.

தேர்தல் கருத்து கணிப்பை விட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம். அதன் பிறகு பேசலாம் என தெரிவித்தார். மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர் சி போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!