உலகம் செய்தி

திரைசேறி சர்ச்சை – நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்தமை உறுதியானது

மர்மமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது.

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாகக் கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

அவரது கை மற்றும் காலில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த உதவிப் பணிப்பாளரின் உடற்கூறு பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில், உடற்கூறு பரிசோதனை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று (01) பிற்பகல் நடைபெற்றது.

அதன்படி, இந்த மரணம் அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் ஏற்பட்டது என்பதை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நான்கு சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!