நேட்டோவை கலைக்கும் முழுவீச்சில் ட்ரம்ப்!! ஸ்பெயினுக்கு அச்சுறுத்தல்!
ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க நேட்டோ நட்பு நாடுகள் உதவாத நிலையில் கடும் விமர்சனங்களை வெளியிட்ட அவர் தற்போது இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.
மேலும், ஜெர்மனியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்பெயின் மீது வர்த்தகத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது.





