ஐரோப்பா செய்தி

பிரியானா வழக்கு- சமூக ஊடக நிறுவனங்களுடனான பிரதமரின் சந்திப்பால் தாயார் கடும் அதிருப்தி

இணையப் பாதுகாப்பு தொடர்பாக சமூக ஊடக நிறுவன தலைவர்களை பிரதமர் சந்தித்தது தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக 2023 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பதின்ம வயதுப் பெண் பிரியானா கேய்யின் (Brianna Ghey) தாயார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்டார்மர் (Starmer) இந்த மாதத் தொடக்கத்தில் கூகுள், டிக்டாக் மற்றும் மெட்டா (Meta) நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, பிரித்தானிய குழந்தைகளை பாதுகாக்க இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தினார்.

ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்பாக இவ்வாறு நிறுவன தலைவர்களை சந்தித்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை” ஏற்படுத்தியதாக பிரியானாவின் தாயார் எஸ்தர் கே (Esther Ghey) கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் அனுபவித்த துயரத்தை ஏனைய குடும்பங்கள் அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு உறுதியான நிலைப்பாடு இருப்பதாகவும், பிரதமர் தங்கள் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியமானது என்றும் இது குறித்து ஒருமித்த கருத்து இல்லாத சிக்கலான பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு வாரிங்டன் (Warrington) பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 16 வயதான பிரியானா, இரண்டு பதின்வயதினரால் கொல்லப்பட்டார். சமூக ஊடகங்கள் மற்றும் கைபேசி பயன்பாடு இளைஞர்களை பாதிக்கும் வகையில் உள்ளது எனும் விவாதம் அதன் பின்னர் தீவிரமடைந்துள்ளது.

கொலை செய்தவர்களில் ஒருவர், இணையத்தில் கொலை மற்றும் வன்முறை தொடர்பான உள்ளடக்கங்களுக்கு அதிகமாக ஈர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!