பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!
ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர்.
ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து 42.7) வரைவுத் திட்டமொன்றை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
ரஷ்யாவின் முக்கிய கட்டளை மையத்தின் மீது தாக்குதல் – 12 அதிகாரிகள் பலி!




