உலகம் செய்தி

அமெரிக்கா கப்பலை இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் – ஈரான் குற்றச்சாட்டு

‘தௌஸ்கா’ என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்கா இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் என்று ஐ.நா-வில் உள்ள ஈரானின் தூதரகம், குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலின் பெயர் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைக்கு பதிலளிக்காததால் அந்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

ஆனால், ஈரானின் ஐ.நா தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 19 அன்று இடைமறிக்கப்பட்ட அந்தக் கப்பல் முக்கியமான டயாலிசிஸ் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் சென்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை “மனித உரிமைகள் மற்றும் உயிர் வாழ்வதற்கான உரிமையை மீறும் சட்டவிரோத செயல்” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதிக்கிறது, நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!