உலகம்

இடப்பெயர்வு முயற்சியில் 8000 பேர் பலி : IOM தகவல்!

கடந்த ஆண்டு இடம்பெயர்வுப் பாதைகளில் கிட்டத்தட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இதில் ஐரோப்பாவிற்கான கடல் வழிப் பாதைகளே மிகவும் ஆபத்தானவையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) நேற்று வெளியிட்ட அறிக்கையில் புதிய புள்ளிவிபரங்களுடன் இந்த விடயத்தை  சுட்டிக்காட்டியுள்ளது.

அவ் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் “கண்ணுக்குத் தெரியாத கப்பல் விபத்துகளில்” தொலைந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளது என்றும்,  சுமார் 340,000 குடும்ப உறுப்பினர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 10 இறப்புகள் மற்றும் காணாமல் போதல்களில் நான்கிற்கும் மேற்பட்டவை ஐரோப்பாவிற்கான கடல் வழிப் பாதைகயில் நிகழ்ந்துள்ளன.

இந்தத் துயரங்களைத் தடுப்பதில் உலக நாடுகள் கூட்டு தோல்வியடைந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதாபிமான மற்றும் மீட்புத் துறையின் இயக்குநரான மரியா மொய்தா (Maria Moita) குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!