மண்டேல்சன் பாதுகாப்பு அனுமதி சர்ச்சை – நீக்கப்பட்ட அதிகாரி நாடாளுமன்றத்தில் விளக்கம்?
பீட்டர் மண்டேல்சனுக்குப் பாதுகாப்பு அனுமதி வழங்கியதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியுறவு அலுவலகத்தின் தலைமை அரசு ஊழியரான சர் ஆலி ராபின்ஸ், ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை இரவு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் யெவெட் கூப்பர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பீட்டர் மண்டேல்சன் தொடர்பான தகுதி சரிபார்ப்பு சர்ச்சை காரணமாக பிரதமர் ஸ்டார்மர் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.
அமெரிக்கத் தூதுவராக மண்டேல்சனை நியமிப்பதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரை குறித்து பிரதமருக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், அது வெளியுறவு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படையாக விளக்குவேன் என்று பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.




