இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து – 08 பேர் பலி!
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகாப்டர் நேற்று காலை 8.34 இற்கு பயணத்தை ஆரம்பித்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்த நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan) உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்தில் 08 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் அவை பொன்டியானாக்கிற்கு (Pontianak) கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





