உலகம் செய்தி

இழுபறியில் இஸ்லாமாபாத் பேச்சு! பங்கேற்குமா ஈரான் தூதுக்குழு?

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போர் நிறுத்தத்துக்காக முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களில் அமெரிக்கா திடீர் மாற்றங்களைச் செய்துள்ளதால், அந்நாடுமீது ஈரான் நம்பிக்கை இழந்துள்ளது என சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல ஈரானைத் தாக்கிய தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இஸ்லாமாபாத் பேச்சில் ஈரான் பங்கேற்குமா என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் நாளை (11) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், ஈரான் தூதுக்குழு இன்னும் பாகிஸ்தான் வரவில்லை என தெரியவருகின்றது.

லெபனான்மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் மிக முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக இருக்கின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!