ஐரோப்பா

நேட்டோவில் பிரித்தானியாவிற்கு ஏற்படும் பின்னடைவு : கருவூலத்துறையால் எழுந்த சர்ச்சை!

சர்வதேச நாடுகள் மத்தியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்கள் கருத்துக்கூற மறுத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் கருவூலத்திற்கும் இடையே நிதி ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சையே இதற்கு  காரணம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கெமி பேடனோக் (Kemi Badenoch) மற்றும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் தேசி ( Tan Dhesi) ஆகியோர், இத்திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இது தொடர்ந்து வெளியிடப்படாமல் இருப்பது நேட்டோ அமைப்பில் பிரிட்டனின் நிலையைச் சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, இராணுவத் திறன்கள் குறித்த கவலைகளையும் எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொழிலாளர் கட்சி, 2027-ஆம் ஆண்டுக்குள் முக்கிய பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவதாகவும், அடுத்த நாடாளுமன்றத்தில் இது 3 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

அதே நேரத்தில், டோரிக்கள் பாதுகாப்புக்கு நிதியளிக்க இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பை மீண்டும் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்விரு முரண்பட்ட கொள்கைகள் காரணமாக மேற்படி தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!