ஈரான் உளவு பிரிவு தலைவரின் கதையை முடித்துவிட்டோம்: வேட்டை தொடரும் என்கிறது இஸ்ரேல்!
ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் Majid Khademi இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஈரானியத் தலைவர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளை, தமது உளவுப் பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஈரானின் கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி உட்பட முக்கிய தளபதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் இன்று 38 ஆவது நாளாக தொடர்கின்றது.





